உள்ளடக்கத்திற்கு செல்

வள்ளலார் ஆதியினம்

எதுவும் என்னால் இல்லை, எதுவும் எனது இல்லை, எல்லாமும் எல்லோருக்கும்

வள்ளலார் ஆதியினம் · ஒளிநெறி பீடம்

அகமாற்றத்திற்கான ஆன்மீக வழி

ஆதிமகா யோகியின் தொன்மை ஞானத்தை கண்டறியுங்கள் — நிறைவான வாழ்விற்கான நெறிகளை உங்களுக்குள்ளே ஆய்வு செய்து, உங்களுக்குள்ளே உறைந்துள்ள ஒளியை விழிப்படையச் செய்யுங்கள்.

ஒளிநெறியை பற்றி அறிக ஐந்து வழிகளை அறிக

ஒளிநெறி என்றால் என்ன?

ஒளிநெறி அறிமுகம்

பக்தி என்ற பெயரில் இன்று கோவில்களில் கூட்டம் பெருகி உள்ளது. ஞானம் என்ற பெயரில் ஆசிரமங்களிலும் கூட்டம் மிகைப்பட்டு இருக்கிறது. ஆனால் மனித சமுதாயம் மனித தன்மையை இழந்து தெளிவற்று வாழ்ந்து கொண்டிருக்கிறது.

போதனைகள், புத்தகங்கள், குருமார்கள், உபதேசங்கள், தியான முறைகள் என்று எல்லாவற்றையும் ஏற்று தெளிவடைந்த பின்னும் அவற்றை பயின்று நிறைவான வாழ்க்கையை வாழ முடியாமல் மனித சமுதாயம் துன்பப்படுகிறது.

அதற்கான காரணத்தை அவனுக்குள் ஆய்வு செய்யவைத்து மனிதனை மாமனிதனாக்கி இறைவன் இயங்கும் களமாக மாற்றுவதற்கான வாழ்வியல் முறையே ஒளிநெறி ஆகும்.

ஐந்து வழிகள்

ஒளி நெறியை உணர்வதற்கான வழிகள்

தொன்மை குருகுல மரபின் முதன்மை குருவாகிய ஆதிமகா யோகி பிரபஞ்ச பேருண்மை இரகசியங்களை ஐந்து இடங்களில் விதைத்து வைத்தார்.

1 🛕 ஆலயம் & வழிபாடு

ஆலய தெய்வ வடிவங்களில் அதன் வழிபாட்டு சடங்குகளில் மறைத்து வைத்தார்.

2 📜 மொழி

அறிவு விளக்கங்களை தமிழிலும், அசைவு விளக்கங்களை சமஸ்கிருதத்திலும் விதைத்து வைத்தார்.

3 🌿 வாழ்வியல் முறை

மனிதன் வாழ வேண்டிய வாழ்வியல் முறைகளில் (கலாச்சாரம்) பேருண்மைகளை புகுத்தி வைத்தார்.

4 🧘 உபதேச குரு

தொன்மை குருகுல வகுப்புகளில், உபதேச குருவின் வடிவம் ஏற்று, உண்மைகளை உணர்த்தி வருகின்றார்.

5 உள்ளுணர்வு

அகம் நோக்கிய பயணத்தில், பக்குவம் முதிர்வை அடைந்தவர்களுக்கு, உள்ளுணர்வின் வடிவம் கொண்டு உபதேசங்களை தொடர்கின்றார்.

ஆதிமகா யோகி வகுத்து தந்த ஐந்து வழிகளில் முயன்று, பெற்ற அரிய உபதேசங்களை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்தும் அமைப்பே வள்ளலார் ஆதியினம்.

உங்கள் பயணத்தை தொடருங்கள்

மேலும் தேடத் தயாராக உள்ளீர்களா?

உபதேசங்கள், சேவைகள், புத்தகங்கள் மற்றும் பலவற்றை ஆராயுங்கள்.