உள்ளடக்கத்திற்கு செல்

வள்ளலார் ஆதியினம்

எதுவும் என்னால் இல்லை, எதுவும் எனது இல்லை, எல்லாமும் எல்லோருக்கும்
கட்டுரைகளுக்கு திரும்பு

28 மே, 2026

அகம் நோக்கி இருப்பதை, புறம் நோக்கி தேட வைத்தது எது? ஏன்?

புறம் நோக்கி தேடவைத்தது மலம். (ஆணவம், கன்மம், மாயை)

மனிதன் பிறப்பெடுத்து வந்திருப்பதே மலத்தை கரைப்பதற்காக. உலகில் உள்ள உயிர் உறவுகளையும், உடைமை உறவுகளையும் தொடர்பு கொண்டு பெறுகின்ற அனுபவங்கள் மூலம் மலமானது கரைக்கப்படுகிறது. வாழ்க்கையில் மலத்தை கரைப்பதன் மூலமாக அறிவில் தெளிவையும்(நிறைவு), செயலில் ஒழுங்கையும் (இன்பம்) மனிதன் அடைகின்றான்.

மலத்தின் தலைவன் “அகந்தை” (EGO). இது “நான்” மற்றும் “எனது” ஆகிய இரண்டின் கலவை. காலை விழித்தது முதல் இதன் துணையின்றி இயங்க முடியாது. இதுதான் உயிர் உறவுகள், உடைமை உறவுகள் ஆகியவற்றை அடையாளப்படுத்தி அறிமுகப்படுத்துகின்றது. அதனால் உலகத்தில் தொடர்பு கொண்டு அறிய நினைக்கின்ற அறிவையும், அடைய நினைக்கின்ற சுகத்தையும் “நான்-எனது“ துணைக் கொண்டு புறம்நோக்கி (உலகத்தில்) தேட ஆரம்பிக்கின்றான்.