உள்ளடக்கத்திற்கு செல்

வள்ளலார் ஆதியினம்

எதுவும் என்னால் இல்லை, எதுவும் எனது இல்லை, எல்லாமும் எல்லோருக்கும்
கட்டுரைகளுக்கு திரும்பு

29 மே, 2026

மலம் என்றால் என்ன?

இறைவனுக்கும் நமக்கும் உள்ள தடையே, மலம். ஆன்மா மீது படிந்த களங்கம், மலம். களங்கப்பட்டதால், இறைமையின் ஆளுமையை ஏற்று இயங்கவேண்டிய ஆன்மா, தனது சுய இயல்பான ஆன்ம இயல்பை வெளிப்படுத்த முடியாமல் போகின்றது. ஆன்ம இயல்பு மட்டுமே ஆன்மாவை இறைவனுடன் இணைக்கும்.

ஆன்மா மீது படிந்த மலம் இறைவனிடமிருந்து பிரிக்கும். ஆன்ம இயல்பு வெளிப்பாட்டை தடுப்பது மலம். அல்லது அழுத்தம் பெற்ற இருள் துகள்கள், அழுக்கு, களங்கம் என்றும் சொல்லலாம். இந்த தடைகளை உடைத்து மலத்தை நீக்கிக் கொள்ளவே, ஆன்மா ஜீவனாக பல்வேறு நிலைகளில் பிறப்பெடுக்கின்றது. மலம் படிந்த நிலையில் ஆன்மாவுக்கு, ஜீவன் என்று பெயர்.