கேள்வி பதில்
வள்ளலார் ஆதியினத்தின் போதனைகளிலிருந்து ஆன்மீகக் கேள்விகளுக்கு விடை.
கே
ஒளிநெறி என்றால் என்ன?
ஒளிநெறி என்பது "ஒளியின் வழி" என்று பொருள்படும். ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இருக்கும் இறைமையை உணர்ந்து, மாமனிதனாக மாறுவதற்கான வாழ்வியல் முறையே ஒளிநெறி ஆகும்.
இது ஒரு மதம் அல்ல, ஒரு பிரிவு அல்ல. இது நம் முன்னோர்கள் பின்பற்றிய உலகளாவிய ஆன்மீக வழி. தொன்மை குருகுல மரபு வழியாக இந்த அரிய உண்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
கே
மனிதனிடம் உள்ள மூன்று உடல்கள் யாவை?
மனிதனிடம் மூன்று உடல்கள் உள்ளன:
1. பருவுடல்
2. நுண்ணுடல்
3. மூல உடல்
கே
மனிதனின் பருவுடல் என்றால் என்ன?
பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், உராய்தல் என ஐந்து வகை ஏக்கங்களை (மலத்தை) கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்ற கருவிகளின் வழியாக உலகத்தோடு (உயிர் உறவுகள், உடைமை உறவுகள்) தொடர்பு கொண்டு நீக்கிக் கொள்ளும் களமே பருவுடல்.
கே
ஜீவகாருண்யம் என்றால் என்ன?
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்வதற்கு உதவுவதும், அதன் வளர்ச்சியை தடை செய்யாமல் இருப்பதும் ஜீவகாருண்யமாகும்.
கே
மனிதனின் இயக்க ஒழுங்கு என்றால் என்ன?
மனிதன் செய்யும் அனைத்து செயல்களின் விளைவு இன்பமாக, நிறைவாக இருப்பதற்கு இயற்கை வகுத்த விதிகளே இயக்க ஒழுங்கு.
உதாரணம்: பசித்த பின் உண்பது, இரவில் உறங்குவது.